எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலியால் சர்வதேச திறன் மையங்கள் அதிகம் உள்ள இந்தியாவுக்கு பல முக்கிய பணிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதாகக் கூறி எச்1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 88 லட்சம் ரூபாயை உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த விசாவை இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பயன்படுத்தி வந்ததால் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
விசா நடைமுறைகளில் உள்ள சில கட்டுப்பாடுகளால், பணியாளர்கள் தொடர்பான நடைமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச திறன் மையங்கள் அதிகம் அமைந்துள்ள இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ, சைபர் செக்யூரிட்டி, பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளை இந்தியாவில் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.