பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற உயர்ரக போதைப்பொருளை போலீசார் விரட்டிப் பிடித்துப் பறிமுதல் செய்தனர்.
தமிழக கேரள, எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் செங்கவிளை பகுதியில் காரில் போதைப் பொருள் கடத்தி செல்லப்படுவதாகத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து ரோந்து போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் கார் நிற்காமல் சென்றதால் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் கொல்லங்கோடு பகுதியில் காரைச் சுற்றி வளைத்து நிறுத்தினர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்குச் சூழந்ததால் பதற்றம் நிலவியது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட MDMA வகை போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
















