இந்திய ராப் பாடகர் பாட்ஷா 12 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரைச் சொந்தமாக்கியுள்ளார்.
இதன் மூலம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மாடல் காரைச் சொந்தமாக்கிய முதல் இந்திய இசைக்கலைஞர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்த காரை வாங்கியதன் மூலம் ஷாருக்கான், அல்லு அர்ஜுன் மற்றும் பூஷன் குமார் உள்ளிட்ட பிரபலங்களின் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.
மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.