திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளிலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களோடு மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா எனப் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.