நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் புலம்பி வருகிறார்.
உலக நாடுகளிடையே மூண்ட 7 போர்களை நிறுத்திவிட்டேன், 11 போர்களை நிறுத்தி விட்டேன் என்று தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார் டிரம்ப்.
உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், நோபல் பரிசு தரவில்லை என்றால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகி விடும் என்று டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார்.