ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகன ஒட்டியை காட்டு யானை தாக்க வந்த காட்சி வெளியாகி உள்ளது.
ஆசனூர் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை உலாவிக் கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், யானையைக் கடந்து செல்ல முயன்றது.
அப்போது திடீரென இருசக்கர வாகன ஓட்டியை யானை தாக்க வந்தது. அவர் உடனடியாக வாகனத்தை வேகமாக இயக்கியதால் நூலிழையில் உயிர் தப்பினார்.