உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் எடுத்த முயற்சி, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது.
மூன்று ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.