வீட்டு பணிப்பெண்ணை தாக்கியதாக நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை டிம்பிள் ஹயாதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
குறிப்பாகத் தெலுங்கு படங்களில் இவரை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில், ஒடிசாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கியதாக ஹயாத்தி மற்றும் அவரது கணவர் மீது பிலிம்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.