சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீன அதிபருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் சோயா பீன்ஸ் விவசாயிகளின் விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை சீன அரசு வாங்க மறுக்கிறது என்றும், இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க வரி விதிப்புகளால் கிடைக்கும் பணத்தில் இருந்து சிறிய தொகையை விவசாயிகளுக்கு கொடுத்து உதவுவோம் எனக்கூறியுள்ள அதிபர் டிரம்ப், தங்கள் நாட்டு விவசாயிகளை ஒருபோதும் கைவிடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.