சென்னை திருவேற்காடு நகராட்சியில் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவேற்காடு மேல் அயனம்பாக்கத்தில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பாட்டன் குளத்தை சீரமைத்து, பூங்கா அமைக்க 2022ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4.25 ஏக்கர் பரப்பளவு உடைய குளத்தை, ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டது.
6 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்ட நிலையில், தற்போது வரை 90 சதவீத பணிகள் மட்டுமே முடித்துள்ளதாக கூறப்படுகிறது. குளம் மற்றும் நடைபாதையில் செடி, கொடி முளைத்து சீர்கேட்டுடன் புதர்மண்டி கிடப்பதாகவும், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.