திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மட்டும் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்த நிலையில், எம்.எம்.தெருவில் சுற்றுலா வேன் ஓட்டுநர் ஆறுமுக கணேசன் என்பவரை தெருநாய்கள் கடித்துள்ளன.
வேன் ஓட்டுநரின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.