பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியை கட்சி பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமனம் செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ராமதாஸுடன் இணைந்து அவரது மூத்த மகள் காந்திமதியும் வழங்கினார்.
இதனைதொடர்ந்து தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மகிழ்ச்சியான நாள் என்றும், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் நாள் எனவும் கூறியுள்ளார். தான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவர் தமிழ்க்குமரன் என்றும், பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.