இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.. இதனையடுத்து வரும் 26 ம் தேதி முதல் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினமும் இண்டிகோ விமான சேவை இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரக ரீதியில் ஏற்பட்ட முடிவுகளை தொடர்ந்து, மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
டில்லியில் இருந்து குவாங்கு நகருக்கு விமான சேவையை துவக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் பயன்படுத்தப்படும் என்றும் குறிபிடப்பட்டுள்ளது.