சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயதசமியையொட்டி குஜராத் மாநிலம் கச் நகரில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீபகாலமாக சர் க்ரீக் எல்லையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்புகளை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இதன் மூலம், அவர்களின் நோக்கம் என்னவென்பது தெரிந்து விட்டதாகவும் அவர் கூறினார். நம் ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் இணைந்து தேசத்தின் எல்லைகளை காத்து வருவதாக கூறிய அவர் சர் க்ரீக் எல்லை பகுதியில் பாகிஸ்தான் அத்துமீற முயன்றால், அமைதியாக இருக்க மாட்டோம் என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.