திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நிறைவு பெற்றது.
பிரமோற்சவ விழாவின் கடைசி நாளில் கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருடன் புஷ்கரணிக்கு எழுந்தருளினார்.
அங்கு வேத மந்திரங்கள் முழங்க, உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் ‘கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பினர்.
பின்னர் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.