டெல்லியில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு டெல்லியில் இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று கடந்த 28ம் தேதி பெண் ஒருவர் விகாஸ் பூரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஹரியானா மாநிலம் ஹன்சியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து சிறுவனை மீட்டனர்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.