மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாமென இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆண்கள் அணி பாகிஸ்தானுடன் கைக்குலுக்குவதை தவிர்த்திருந்தது. எனவே, பெண்கள் அணிக்கும் பிசிசிஐ அவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.