உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நார்வேயின் ஃபோர்டேயில் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 48 கிலோ பிரிவில் கலந்து கொண்ட மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் வடகொரிய வீராங்கனை ரி சாங்-கம் மொத்தம் 213 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
தாய்லாந்தின் தான்யாதோன் சுக்சரோயன் மொத்தம் 198 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.