நெல்லையில் நீதிமன்ற ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட கூலித்தொழிலாளி 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
களக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் தொடர்பான வழக்கு ஒன்று நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் நகலைப் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்த முருகன், அங்குப் பதிவறை எழுத்தராக இருந்த மாரியப்பன் என்பவருக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.
இதனை நேரில் பார்த்த நீதிபதி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பதிவறை எழுத்தர் மாரியப்பன் உயிரிழந்த நிலையில் முருகன் மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். அவர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரர் கல்வி கற்காதவர் என்பதால் இந்தத் தொகையை அவர் தெரியாமல் கொடுத்துள்ளார் எனவும் வழக்கில் இருந்து முருகன் விடுவிக்கப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.