அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாகச் செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் தவிர, மற்ற துறை ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேலவையான செனட்டில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், கடந்த 24 மணி நேரமாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இவ்வாறு அமெரிக்க அரசு முடங்கியிருப்பதால் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படும் என்றும், 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.