இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருவதை கௌரவமாகக் கருதுவதாகக் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியில் கேரளாவில் விளையாட இருக்கிறார்.
டிச.13ஆம் தேதி கொல்கத்தா வரும் மெஸ்ஸி, அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லிக்கு சுற்றுப் பயணம் செல்கிறார்.
கடைசியாக டிச.15ஆம் தேதி பிரதமரைச் சந்தித்து பேசவிருக்கிறார். இந்நிலையில் இந்தியா வருகைகுறித்து பேசிய மெஸ்ஸி, இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த நாடு என்றும், பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்த நல்ல நினைவுகள் தனக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதிய தலைமுறை கால்பந்து ரசிகர்களைச் சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.