இந்திய சினிமாவை தாங்கள் மிகவும் நேசிப்பதாகவும், ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களுக்காகவே ஒரு முழு தொலைக்காட்சி சேனல் உள்ளது என்றும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் சோச்சியில் 140 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களின் சர்வதேச வால்டாய் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின், சோவியத் யூனியன் காலத்திலிருந்தும், இந்தியா சுதந்திரத்திற்காகப் போராடிய நாளிலிருந்தும் இந்தியாவுடனான தங்கள் உறவுகள் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.
பிரதமர் மோடி மிகவும் நியாயமான மற்றும் ஞானம் கொண்ட தலைவர் என்று கூறிய புதின், இந்திய சினிமாவை தாங்கள் நேசிக்கிறோம், இந்திய சினிமாவை ஒளிபரப்பும் தனி தொலைக்காட்சி சேனல் ரஷ்யாவில் உள்ளது எனவும் கூறினார்.