ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டிற்கான விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.
இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சுவாமி மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது வழி நெடுகிலும் வள்ளி, கும்மி ஆட்டம் மற்றும் பாரம்பரிய இசையுடன் பக்தர்கள் நடனமாடியதோடு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி நாமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.