மிஷன் இம்பாசிபிள் படங்களின் நாயகனான டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாராலும் செய்ய முடியாத ஸ்டண்ட் காட்சிகளை சாதாரணமாக செய்து முடிப்பதன் மூலம், ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் டாம் குரூஸ். இவரது நடிப்பில் வெளியாகும் மிஷன் இம்பாஸிபிள் திரைப்படங்கள் உலகளவில் வசூலை வாரிக் குவிக்கும்.
இந்நிலையில் 63 வயதான டாம் க்ரூஸும், 37 வயதான நடிகை அனா டி அர்மாஸும் நீண்ட காலமாகவே காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தங்களது திருமணம் பிறரை போலச் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் டாம் க்ரூஸ் – அனா டி அர்மாஸ் ஜோடி கவனமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் தங்களது திருமணத்தை விண்வெளியிலோ அல்லது நீருக்கடியிலோ நடத்த இந்த ஜோடி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாம் க்ரூஸ் ஏற்கனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும், அனா டி அர்மாஸ் ஒரு முறை விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.