ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கான நெருக்கடி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்ய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதுடன், பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த எரிபொருள் நெருக்கடிக்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது.
நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா தற்போது தனது எரிபொருள் தேவையைச் சமாளிக்க பெலாரஸில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.