கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரைந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சரும், எம்பியுமான அனுராக் தாகூர் எழுதியுள்ள கடிதத்தில், கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவத்தால் கரூர் மக்கள் சோகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்திற்கு முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறியுள்ள அவர், இதுதொடர்பான அறிக்கையை அதிகாரிகள் விரைவில் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளளார்.
கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான காரணம் என்ன? இனி இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை போன்றவை குறித்து அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு அனுராக் தாகூர் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.