ஐந்தாம் தமிழ் சங்க அமைப்பு, கடவுள் ராமரை அவமதித்ததாகக் கூறி திருச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அயன்புத்தூர் கிராமத்தில் 5ம் தமிழ் சங்கத்தினர், கடவுள் ராமரை அவமதித்து அவரது உருவபடத்தை எரித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியானதை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடவுள் ஸ்ரீ ராமரை அவமதித்த 5ம் தமிழ் சங்க அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும், அந்த அமைப்பு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.