தொழில் துறையினருக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மின்னணு உற்பத்தித் தொழில்துறைக்கு அரிய வகை கனிமங்கள் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லாத வகையில் வினியோக சங்கிலி சிறப்பாக உள்ளதாகவும், கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் கூறினார்.
அரிய வகை கனிமங்களை உள்நாட்டிலேயே கண்டறியவும், வெட்டி எடுத்துப் பயன்படுத்தவும் தேசிய அளவிலான திட்டத்தை 16 ஆயிரத்து 300 கோடி ரூபாயில் மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.