பஞ்சாப்பில் சொத்து மொத்தமும் தனது பெயரில் எழுதி வைக்கக்கோரி மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தைச் சேர்ந்த குர்பஜன்கவுர் என்பவரின் கணவர், தொடக்க கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மகன் வீட்டில் குர்பஜன்கவுர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துகளைத் தனது பெயருக்கு மாற்றித் தரக்கோரி குர்பஜன்கவுரின் மருமகள் ஹர்ஜீத்கவுர் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.
மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்கும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த குர்பஜன்கவுரின் பேரன், வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.
இந்தக் காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.