கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இது குறித்து, ‘கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்’ என்ற தலைப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், கீழடி அருங்காட்சியகம் திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.