நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நடிகையையும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்,பாஜக மாநிலத் துணைத்தலைவர் வெங்கடேசன் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.