ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மேடைதோறும் “நானும் டெல்டாக்காரன்” என்று வெற்றுப் பெருமை பேசும் முதல்வருக்கு, “ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும்” எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 50 மட்டும் மறந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடுத்த வாக்குறுதிப்படி புதிய சேமிப்புக் கிடங்குகளைத் தான் அமைக்கவில்லை என்றால், நடப்பாண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 50% குறைப்பது, அரசு கொள்முதல் நிலையங்களில் தானியங்களை மழையில் நனையவிட்டு வீணாக்குவது என உழவர்களை வதைப்பது ஏன்? என்றும் அவர் வினவியுள்ளார்.
இப்படி கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது, விவசாயிகளின் நலனையும் கைகழுவி, அவர்களது வயிற்றில் அடிக்கும் அறிவாலயம்
அரசை உழவர் பெருமக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.