சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலை அடுத்து கோயிலில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் இஸ்கான் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்கான் கோயில் முழுவதும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.