பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
தமிழக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். கிடுகு பட இயக்குநர் வீர முருகன் இயக்கியுள்ள கந்தன் மலை திரைப்படத்தில் ஹெச்.ராஜா நடித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றும், ஆனால் , இந்தியா நேபாளம்போல் மாற வேண்டுமென சில சக்திகள் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
===