கரூர் துயர சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் எனவும் ஆணையிடப்பட்ட நிலையில், நாமக்கல் எஸ்பி விமலா மற்றும் சிஐடி எஸ்பி சியாமளா தேவி ஆகியோர் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சிறப்பு புலனாய்வு குழுவில் ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும், கரூர் போலீசாரிடம் உள்ள கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.