சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா முன்னேறி உள்ளார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா, பிரிட்டன் வீராங்கனை சோனய் கர்தலை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.