இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் சிடொர்ஜொ நகரில் உள்ள அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதம் தொடர்பான பாடம் பயின்று வந்தனர்.
இங்கு வழக்கம்போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.