பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின் போது, அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள் மற்றும் ஆயுதங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளை பாகிஸ்தான் அரசு பறிப்பதாகக் கூறி கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் பாகிஸ்தான் ராணுவத்தை ஸ்தம்பிக்க வைத்ததுடன், அந்நாட்டு ராணுவத்தை கதிகலங்கச் செய்தது. ஏனெனில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலரை சிறைபிடித்த போராட்டக்காரர்கள், அவர்களின் உடைகளை களைந்து, ஆயுதங்களையும் பறித்தனர்.
சாதாரண பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சிக்கியதால் உலகளவில் இந்தச் சம்பவம் பேசுபொருளான நிலையில், தற்போது, அந்த ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உடைகளை பொதுவெளியில் விற்பனைக்கு வைத்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.