பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரையிலான ஊதியத்தை இழப்பீடாக டிசிஎஸ் வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஐடி சேவை நிறுவனம் டிசிஎஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது.
6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது.
இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்தச் சூழலில், கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாகவும், வேலையை விட்டு வெளியேறக்கூடிய ஊழியர்களுக்கு முறையாக இழப்பீடுகளை வழங்காமல் தவிர்ப்பதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.