வடக்கு கரோலினாவில் கடல் அலையின் சீற்றம் காரணமாகக் கடந்த 2 வாரங்களில் 9 வீடுகள் இடிந்து தரைமட்டாகி உள்ளன.
வட கரோலினாவின் கடற்கரை நகரமான பக்ஸ்டனில் கடந்த சில வாரங்களாகக் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.
இதனால் அலைகள் வேகமாக எழுந்து கரையோரங்களில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் 9 வீடுகள் கடல் அலைகளால் இடிந்து சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.