அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த இந்திய வம்சாவளி நீதிபதி குறித்த விவரங்கள் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸுக்கு பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அருண் சுப்பிரமணியன் என்பவரே தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதியின் தீர்ப்பை இணையத்தில் பகிர்ந்து பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட சுப்பிரமணியன் முதல் தெற்காசிய நீதிபதி என்ற வரலாற்றை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.