திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 3 மாதங்களே ஆன கைலாசநாதர் கோயிலில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் புனரமைப்பு பணிகளை சரிவரச் செய்யாததாலேயே கோபுர கலசம் விழுந்ததாகவும், இதேபோல் கோயில் சுற்றுச்சுவர்களில் தரமற்ற முறையில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.