தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
இந்துகள் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக உள்ளது தீபாவளி ஆகும். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் தீபாவளியை ஒட்டிக் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
டெல்லியின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான் சதார் பஜாரில் மின்விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.