ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 669 ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கி கணக்குகளில் 436 கோடி வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்விற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன்கல்யாண் ஆகியோர் ஆட்டோவில் பயணித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்களின் காக்கி நிற சட்டை அணிந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
நெல்லூரில் எம்எல்ஏ கிருஷ்ணா ரெட்டி தலைமையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதை ஒட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆடி, பாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.