கன்னியாகுமரியில் கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்குமாறு 48 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி ரத வீதியில் பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உட்பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது.
பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கன்னியம்பலத்துக்கு சென்று ஓய்வெடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
காலப்போக்கில் கன்னியம் பலத்தை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. அதனால் கன்னியம்பலம் மூடப்பட்டது. வரலாற்று சிறப்பும், பாரம்பரிய வரலாறும் கொண்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் அறநிலையத்துறையினரின் அதிகார அத்துமீறல்களால் தற்போது அழிவைச் சந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அறநிலையத்துறைக்கு வரி செலுத்தி கடந்த 40 ஆண்டுகளாக கடை நடத்தி வந்த வியாபரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், கன்னியம்பலத்தை சீரமைத்து திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.