ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் என பாஜக பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிறப்பினால் ஏற்படும் ஜாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று கூறி ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்திய, திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என, ஜீவகாருண்யத்தையும், ஆன்மீகத்தையும் வளர்த்தவர்.
அவர் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபை, இன்றும் தினமும் பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வருகிறது.
சமூகத்தில் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்ற நோக்கத்திற்காக வாழ்ந்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார். .