கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தவெகவினர் சந்திக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், விஜய் உத்தரவின் பேரில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
விரைவில் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.