சுதேசி உணர்வோடு தீபாவளியைக் கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தீபாவளியன்று எந்த வெளிநாட்டுப் பொருளையும் வீட்டிற்குள் கொண்டு வர மாட்டோம் என உறுதியேற்க வேண்டும் என கூறினார்.
தொழிலதிபர்கள் தங்கள் கடைகள் மற்றும் மால்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என முடிவெடுத்து 140 கோடி மக்களும் அதனை வாங்கினால் இந்தியா சிறந்த தேசமாக மாறும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.