குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாமில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் உடல்நல விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5, 10, 21 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கராஜ் மைதானாத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயம், ராணுவ படகு இல்லம், சிம்ஸ் பூங்கா, எடப்பள்ளி, ராணுவ பயிற்சி கல்லூரி வழியாக சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் ஹரி, சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.