அரசு கேபிள் இணைப்பில் @PttvNewsX சேனலைத் தமிழ் சேனல்களின் வரிசையுடன் இடம்பெறச்செய்யாமல் பிற மொழி சேனலாகப் பட்டியலிட்டு திமுக அரசு முடக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக மாநில நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக @TamilJanamNews
சேனலையும் அரசு கேபிள் இணைப்பில் இடம்பெறச் செய்யாமல் தடுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், தங்கள் ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து முடக்கப்பார்க்கும் திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, தனக்கு எதிரான செய்திகள் வெளியே வரக்கூடாது எனத் தொலைக்காட்சி சேனல்களின் இணைப்பையும் முடக்கிவருவது திராவிட மாடலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” என்று சர்வாதிகார அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனை திரையிட்டு மறைத்தாலும், திசைதிருப்பு நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மேடையில் அறிவாலய அரசின் அனைத்துத் தவறுகளும் பட்டியலிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாசிச திமுகவுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.